\
திண்டுக்கல்: கஞ்சா வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் உட்பட 4 பேர் கைது..ரூ.10 லட்சம் பறிமுதல்

திண்டுக்கல்: கஞ்சா வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் உட்பட 4 பேர் கைது..ரூ.10 லட்சம் பறிமுதல்

திண்டுக்கல்: கஞ்சா வழக்கில் தலைமறைவாக இருந்த நபர் உட்பட 4 பேர் கைது..ரூ.10 லட்சம் பறிமுதல்
Published on

திண்டுக்கல் அருகே வீட்டில் பதுங்கி இருந்த கஞ்சா வியாபாரியை எஸ்.பி தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேன் 2 இருசக்கர வாகனங்கள் ரூ. 10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தரபாண்டி. இவர் மீது ஏற்கெனவே கஞ்சா கடத்தியதாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இவரை திண்டுக்கல் மாவட்ட தனிப்படை போலீசார் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் - கரூர் சாலையில் உள்ள பாலாஜி நகர் பகுதியில் சௌந்தரபாண்டி தனது கூட்டாளிகளுடன் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டை சுற்றிவளைத்த தனிப்படை போலீசார் சௌந்திரபாண்டி உள்ளிட்ட 4 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.


இதையடுத்து வீட்டில் இருந்த ரூ. 10 லட்சம் ரூபாய் ரொக்கம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com