படுகொலை செய்யப்பட்டவர்
படுகொலை செய்யப்பட்டவர்pt desk

திண்டுக்கல்: உறவு முறையை மீறிய காதல் - இளைஞரை வெட்டிப் படுகொலை செய்த நபர் கைது

வத்தலக்குண்டு அருகே காதல் விவகாரத்தில் இளைஞரை வெட்டிப் படுகொலை செய்த காதலியின் தந்தை கைது செய்யப்பட்டார்.
Published on

செய்தியாளர்: அஜ்மீர் ராஜா

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள குன்னுவரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கபிலன் (24). சென்னை துறைமுகத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வந்த இவர், அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகளை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கபிலன் காதலித்த பெண், அண்ணன் தங்கை உறவுமுறை என்பதால் இதனை மணிகண்டன் கண்டித்துள்ளார். இருப்பினும் கபிலன் தன் காதலை கைவிட மறுத்ததாக தெரிகிறது.

Arrested
Arrestedfile

இதையடுத்து தன் காதலியை பார்க்க அவரது வீட்டிற்குச் சென்ற கபிலனுக்கும், மணிகண்டனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மணிகண்டன் அருகில் இருந்த அரிவாளை எடுத்து கபிலனை சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில், படுகாயமடைந்த கபிலனை மீட்டு விருவீடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கபிலன் பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகொலை செய்யப்பட்டவர்
மதுரை: கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்து – வாக்கிங் சென்ற தந்தை மகள் உயிரிழப்பு

இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த விருவீடு போலீசார், மணிகண்டனை (46) கைது செய்தனர். இதைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com