\
திண்டுக்கல்: வாகன சோதனையில் சிக்கிய போதை பொருட்கள்: மதிப்பு எவ்வளவு தெரியுமா?

திண்டுக்கல்: வாகன சோதனையில் சிக்கிய போதை பொருட்கள்: மதிப்பு எவ்வளவு தெரியுமா?

திண்டுக்கல்: வாகன சோதனையில் சிக்கிய போதை பொருட்கள்: மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Published on

திண்டுக்கல்லில் ரூ 20 லட்சம் மதிப்புள்ள 1000 கிலோ குட்கா, சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் எஸ்பி தனிப்படையினர் இன்று காலை மேட்டுப்பட்டி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சரக்கு வேன் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த திண்டுக்கல்லை சேர்ந்த காளிராஜா, கவாஸ்கர், நாராயணன், புருஷோத்தமன் ஆகியோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

இதையடுத்து சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ 20 லட்சம் மதிப்புள்ள ஆயிரம் கிலோ எடை குட்கா போன்ற போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது இதனையடுத்து சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், அதை திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்

இதனையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com