அதிமுக நகர செயலாளர்
அதிமுக நகர செயலாளர்pt desk

திண்டுக்கல் | மசூதி மேலாளரை தாக்கிய வழக்கு - அதிமுக நகர செயலாளருக்கு ஓராண்டு சிறை

வத்தலகுண்டு பெரிய பள்ளிவாசல் மேலாளரை தாக்கிய வழக்கில் அதிமுக நகர செயலாளருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நிலக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Published on

செய்தியாளர்: அஜ்மீர் ராஜா

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பெரிய பள்ளிவாசலில் மேலாளர் பணியாற்றியவர் முகமது ரஃபீக். இவர், கடந்த 2012 ஆம் ஆண்டு பணியில் ஈடுபட்டிருந்த போது, கொலை வெறித் தாக்குதல் நடத்தியதாக வத்தலகுண்டு அதிமுக நகர செயலாளர் பீர் முகமது உள்ளிட்ட ஐந்து பேர் மீது வத்தலகுண்டு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Jailed
Jailedpt desk

இது தொடர்பான வழக்கு விசாரணை நிலக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கு முடிவுற்று தீர்ப்பு வெளியானது. இதில், குற்றம் சாட்டப்பட்ட அதிமுக நகர செயலாளர் பீர்முகமதுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நிலக்கோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதிமுக நகர செயலாளர்
உயர் பொறுப்பில் இருக்கும் பெண்ணுக்கே தாக்குதல்... சாமானியரின் நிலை? - x தளத்திலிருந்து விலகிய எஸ்.பி

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரில் 4 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், பீர்முகமதுக்கு ஓராண்டு சிறை தண்டணை விதித்து தீர்ப்பை வழங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com