\
அப்பல்லோ மருத்துவர் வீட்டில் வைர நகை கொள்ளை

அப்பல்லோ மருத்துவர் வீட்டில் வைர நகை கொள்ளை

அப்பல்லோ மருத்துவர் வீட்டில் வைர நகை கொள்ளை
Published on

சென்னை பெருங்குடியில் பெண் மருத்துவர் வீட்டில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள வைர நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

சென்னை பெருங்குடியில் உள்ள சி.பி.ஐ. காலணி 7வது தெருவில் வசிப்பவர் தவபழனி. இவரது மனைவி பெயர் சாரதா. இவர்கள் இருவரும் பெருங்குடியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். நேற்று வழக்கம் போல் தவபழனி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரது மனைவி சாரதா மகாபலிபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். 

கணவன் மனைவி இருவரும் அதிகாலையில் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிலிருந்த 25 சவரன் தங்க நகை, ரூ.8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பாக உடனடியாக துரைப்பாக்கம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, கைரேகை நிபுணர்களுடன் விசாரணை நடத்தி வருகின்றனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com