போக்சோவில் 3 பேர் கைதுpt desk
குற்றம்
தருமபுரி | பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை – போக்சோவில் 3 பேர் கைது
தருமபுரி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 பேரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
செய்தியாளர்: சே.விவேகானந்தன்
தருமபுரி அருகே அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிக்கு ஆசைவார்த்தை கூறி அதே பகுதியைச் சேர்ந்த வேலன் (27) ஜெய்சங்கர் (30) நித்திஷ்குமார் (21) ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவிக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரது தாயார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவி கருவுற்று இருப்பது தெரியவந்துள்ளது.
arrestPT DESK
இதைத் தொடர்ந்து தருமபுரி குழந்தைகள் நல காப்பகத்தில் இருந்து வந்த அலுவலர்கள், மாணவியிடம் விசாரித்துள்ளனர். இதையடுத்து மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் 3 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.