\
1 டன் குட்கா பறிமுதல் - வடமாநில இளைஞர் கைது
1 டன் குட்கா பறிமுதல் - வடமாநில இளைஞர் கைது pt desk

தருமபுரி | சொகுசு காரில் கடத்திவரப்பட்ட 1 டன் குட்கா பறிமுதல் - வடமாநில இளைஞர் கைது

காரிமங்கலம் அருகே சொகுசு காரில் கடத்திவரப்பட்ட 1 டன் குட்கா பறிமுதல் செய்த காவல் துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: சே.விவேகானந்தன்

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்துள்ள கெரகோடஅள்ளி பிரிவு சாலையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு சொகுசு காரை தடுத்தி நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் ரூ.3 லட்சம் மதிப்பிலான 1-டன் குட்கா இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காரை ஓட்டி வந்த ஓட்டுநரை பிடித்து விசாரித்ததில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மகேந்திரா (22) என்பதும், இவர் கர்நாடகா மாநிலத்தில் இருந்து கேரளாவிற்க்கு குட்காவை கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

1 டன் குட்கா பறிமுதல் - வடமாநில இளைஞர் கைது
சென்னை | அடுத்தடுத்த 3 கடைகளில் தீ விபத்து – கரும்புகை சூழ்ந்ததால் வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்

இதைத் தொடர்ந்து காவல் துறையினர் மகேந்திராவை கைது செய்து, சொகுசு காருடன், குட்காவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடததி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com