தாராபுரம்: மாணவிக்கு பாலியல் தொல்லை - அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசுப் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உடுமலைப்பேட்டை காந்திநகர் பகுதியில் வசித்து வரும் முத்துப்பாண்டி என்பவரது மகன் மணிகண்டராஜ் (42). இவர் தாராபுரம் அருகே உள்ள தாசர்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் மணிகண்டன்ராஜ் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவி இதுபற்றி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் மாணவியின் தாயார் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் வித்யாவிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பள்ளி ஆசிரியர் துரித நடவடிக்கையால் சைல்டு ஹெல்ப் லைன் மற்றும் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செல்லம் விசாரணை நடத்தினார் விசாரணையில் ஆசிரியர் மணிகண்டராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.