தமிழகத்தில்  36 மணிநேரத்தில் 2,512 ரவுடிகள் கைது - டிஜிபி சைலேந்திர பாபு

தமிழகத்தில் 36 மணிநேரத்தில் 2,512 ரவுடிகள் கைது - டிஜிபி சைலேந்திர பாபு

தமிழகத்தில் 36 மணிநேரத்தில் 2,512 ரவுடிகள் கைது - டிஜிபி சைலேந்திர பாபு
Published on

தமிழகத்தில் 36 மணிநேரத்தில் மொத்தம் 2,512 ரவுடிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்திருக்கிறார்.

கைது செய்யப்பட்டவர்களில் 733 ரவுடிகள் நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பப்பட்டதாகவும், நன்னடத்தைக்காக ஜாமீன் பெறப்பட்டு 1,927 ரவுடிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். சிறைக்கு அனுப்பப்பட்டவர்களிடம் இருந்து 5 துப்பாக்கிகள், 934 கத்தி, அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

படிப்படியாக குற்றங்கள் குறைக்க ரவுடிகள் கட்டுக்குள் கொண்டுவரப்படுவார்கள் என்றும், காவல்துறை பொதுமக்களின் நண்பனாக நிச்சயம் செயல்படும் என்றும், காவல்துறையினர் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் காவலர்களுக்கு வழங்கப்படும் என்றும் சைலேந்திரபாபு கூறியிருந்தார். அதன் முன்னெடுப்பாக தற்போது 2,512 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com