திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை: அம்பலப்படுத்திய ரயில்வே போலீசாருக்கு டிஜிபி பாராட்டு

திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை: அம்பலப்படுத்திய ரயில்வே போலீசாருக்கு டிஜிபி பாராட்டு

திருவான்மியூர் ரயில் நிலைய கொள்ளை: அம்பலப்படுத்திய ரயில்வே போலீசாருக்கு டிஜிபி பாராட்டு
Published on

திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் கொள்ளை நாடகமாடிய ரயில்வே ஊழியரை கண்டுபிடித்து கைது செய்த ரயில்வே காவல்துறைக்கு, தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் கடந்த 3ஆம் தேதி அன்று துப்பாக்கி முனையில் தன்னை கட்டிப்போட்டு விட்டு டிக்கெட் கவுண்ட்டரில் இருந்த ரூபாய் ஒரு லட்சத்து 32 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றதாக நாடகமாடிய ரயில்வே பயணச் சீட்டு விற்பனையாளர் டீக்கா ராம் மீனா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ஆகிய இருவரையும் ரயில்வே போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிறப்பாகவும் விரைவாகவும் விசாரணை நடத்தி நாடகத்தை அம்பலப்படுத்தி கைது செய்த ரயில்வே காவல்துறை டிஐஜி ஜெயகவுரி தலைமையிலான தமிழக ரயில்வே போலீசாரை தமிழ்நாடு காவல் துறை இயக்குனருக்கும் சட்டம் ஒழுங்கு டிஜிபியுமான சைலேந்திர பாபு நேரில் அழைத்து பாராட்டி பண வெகுமதி அளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com