டெல்லி விமான நிலைய டுவிட்டரை முடக்கிய ஹேக்கர்கள்

டெல்லி விமான நிலைய டுவிட்டரை முடக்கிய ஹேக்கர்கள்

டெல்லி விமான நிலைய டுவிட்டரை முடக்கிய ஹேக்கர்கள்
Published on

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டுவிட்டர் சமூக வலைதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது.

சமீப காலமாக இணையதளங்களை முடக்கம் செய்யப்படும் சம்பவம் உலக அளவில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலும் முக்கிய அரசு துறைகளின் இணையதளங்களை ஹேக்கர்கள் முடக்கி வருவதாக செய்திகள் வெளியாகி வந்துள்ளது. 

இந்நிலையில், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் டுவிட்டரையும், குஜராத் மாநிலத்தில் சூரத் மாவட்ட பள்ளி கல்வி அலுவலக இணையதளத்தையும் ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள் அதில் பாகிஸ்தான் கொடியையும், வசனங்களையும் இடம்பெற செய்துள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் இணையதளம் இயங்க தொடங்கியது. இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்தியா, பாகிஸ்தான் இடையே சைபர் போர் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவை சேர்ந்த ஹேக்கர்கள் பாகிஸ்தானின் சில இணையதளங்களையும், பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் இந்தியாவின் சில இணையதளங்களையும் முடக்கம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com