பெண்குழந்தை வேண்டாமென கருக்கலைப்பு செய்துகொண்ட பெண் உயிரிழப்பு-கடலூரில் மீண்டும் அதிர்ச்சி

பெண்குழந்தை வேண்டாமென கருக்கலைப்பு செய்துகொண்ட பெண் உயிரிழப்பு-கடலூரில் மீண்டும் அதிர்ச்சி
பெண்குழந்தை வேண்டாமென கருக்கலைப்பு செய்துகொண்ட பெண் உயிரிழப்பு-கடலூரில் மீண்டும் அதிர்ச்சி

கர்ப்பிணியாக இருந்த வேப்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மருந்தகத்தில் கருக்கலைப்பு செய்ததால் தொடர் ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கு சம்பந்தமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட மருந்தாக உரிமையாளர் வடிவேலனிடம் தீவிர விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டு வேப்பூர் காவல் நிலையம் கொண்டு வந்தனர்.

நடந்தது என்ன?

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ் (33) அமுதா (28) தம்பதியர். இவர்களுக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தை உள்ள நிலையில், அமுதா 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், அமுதா, கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் வடிவேலன் என்பவரின் மருந்தகத்தில் சட்ட விரோதமாக கடந்த (17.11.22) அன்று கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என பாலினம் அறிந்துள்ளனர். 

இதையடுத்து பெண் குழந்தை என தெரியவரவே அங்கேயே ரெண்டு நாட்களுக்கு முன்பு சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து சொந்த ஊரான கீழக்குறிச்சி கிராமத்தில் உள்ள வீட்டிற்கு வந்தவுடன் ரெண்டு நாட்களாக ரத்தப்போக்கு தொடர்ந்து இருந்து உள்ளது.

இந்த நிலையில் 19.11.22 நேற்று மாலை உடல்நிலை மோசமானதை அடுத்து வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அமுதா உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பூர் காவல் துறையினர் முதலில் சந்தேகம் மரணமாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை செய்தனர்.

இதையடுத்து உயிரிழந்த அமுதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது இது குறித்து வேப்பூர் காவல் துறையினர் அமுதாவின் கணவர் கோவிந்தராஜிடம் விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடமாடும் ஸ்கேன் சென்டர்!

வடிவேலன் என்பவர் நடமாடும் ஸ்கேன் சென்டர் நடத்தி பாலினத்தை அறிய விரும்புவோரின் வாட்ஸ்-அப் மூலம் தாங்கள் இருக்கும் இடத்தை லொகேஷன் ஷேர் செய்த பின்னர், அங்கு வந்து பாலினத்தை ஸ்கேன் செய்து ஆணா, பெண்ணா என பாலினத்தை தெரிவித்து வந்துள்ளார். மேலும் இவர் மீது இதுபோல் நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இது போன்று மீண்டும் குற்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் பாலினத்தை அறிந்து சட்ட விரோத கருக்கலைப்பில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக அரசு பெண் குழந்தைகளை காப்போம் கற்பிப்போம் என்ற திட்டத்தை கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கடலூர் மாவட்டத்திலும் குழு அமைத்து பெண் பிறப்பு சதவீதத்தை ஆராய்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து கருக்கலைப்பில் ஈடுபட்ட மருந்தக உரிமையாளர் வடிவேலன் என்பவரின் மருந்தகத்தில் திடீர் ஆய்வு கொண்டு அவரை கைது செய்து வேப்பூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர், பின்னர் சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்ட வழக்கை அஜாக்கிரதையாக மரணம் விளைவித்தல் என்ற சட்டத்திற்கு வழக்கை மாற்றி பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com