நிழல் உலக தாதா இப்ராஹிம் ராவுத்தர்
நிழல் உலக தாதா இப்ராஹிம் ராவுத்தர்PT

திருமண வரவேற்பில் கலந்துகொண்ட மும்பை தாதா தாவூத் இப்ராஹிமின் உறவினர் சுட்டுக்கொலை

சுட்டுக்கொல்லப்பட்ட நிஹால்கான் மும்பை பைகுல்லாவில் வசித்து வந்தார். இவரது சகோதரி ரிஸ்வாஹா ஹாசனின் கணவர் இக்பால் கஸ்கர். இவர் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் சகோதரர் ஆவார்.

மும்பையைச் சேர்ந்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் உறவினர் ஒருவர் உ.பி.யில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மும்பை பைகுல்லாவில் வசித்து வருவபர் நிஹால்கான். இவரது உறவினர் ஷகீல் கான். ஷகீல் கானின் உறவினர் கமீல். 2016-ல் ஷகீல் கானின் உறவுக்கார பெண் ருக்சரை, நிஹால்கான் காதலித்து திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார். இது ஷகீல் கானின் உறவினரான கமீல்கானுக்கு பிடிக்கவில்லை. இதனால் கமீலுக்கும் நிஹால்கானிற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இருவருக்குமிடையே ஏற்பட்ட பிரச்னையை உறவினர்கள் சமாதானப்படுத்தி இருக்கின்றனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 15 அன்று ஷகீல்கானின் மகன் திருமணமானது உத்தரப் பிரதேசத்தில் நடந்தது. இதில் கலந்துகொள்ள நிஹால்கான் காரில் உத்தரப் பிரதேசம் சென்றுள்ளார்.

திருமண விழாவிற்கு நிஹால்கான் வருவதை தெரிந்துக்கொண்ட கமீல், இருவருக்கும் இடையே இருந்த முன்பகை காரணமாக நிஹாலை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் திருமணம் முடிந்த நான்காவது நாள் திருமண வரவேற்பு விழா நடந்துக்கொண்டிருந்தது. அச்சமயம் கமீல் பழிவாங்கும் நடவடிக்கையாக, தன்னிடமிருந்த கைத்துப்பாக்கியால் நிஹால் கானின் கழுத்தில் சுட்டுள்ளார். இதில் நிஹால் கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனிடையே மும்பை ஜலாலாபாத்தில் உள்ள நிஹாலின் மனைவி ருக்சர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302ன் கீழ் கமீல் கான் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக நிஹால்கானின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று ஷாஜஹான்பூர் எஸ்எஸ்பி (மூத்த போலீஸ் சூப்பிரண்டு) அசோக் குமார் மீனா உறுதியளித்தார்.

யாரிந்த நிஹால்கான்?

உயிரிழந்த நிஹால்கானின் சகோதரி ரிஸ்வானா ஹாசன். இவரது கணவர் இக்பால் கஸ்கர். இவர் மும்பை நிழல் உலக தாதாவான இப்ராஹிம் ராவுத்தரின் சகோதரர் ஆவார். 2018-ம் ஆண்டு மிரட்டி பணம் பறித்த ஒரு வழக்கில் இக்பால் கஸ்கர் கைது செய்யப்பட்டு தலோஜா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com