உ.பி: துப்பாக்கி முனையில் மிரட்டி இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை..!
உ.பி.யில் பட்டியலின பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் இருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் கான்பூர் தேஹத் மாவட்டத்தில் பட்டியலின பெண் ஒருவர், முன்னாள் கிராமத் தலைவர் உட்பட இரண்டு நபர்களால் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
‘’இந்த சம்பவம் ஒரு வாரத்திற்கு முன்பே நடந்துள்ளது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை தான் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது" என்று கான்பூர் தேஹாத் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கேசவ் குமார் சவுத்ரி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்படி, 22 வயது பெண் தனியாக இருந்தபோது குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் தங்கள் வீட்டிற்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் ஒவ்வொருவராக பாலியல் வன்கொடுமை செய்தனர். இந்த சம்பவத்தைப் பற்றி வெளியே சொன்னால் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஐபிசி மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளதாக எஸ்.பி. சவுத்ரி கூறினார். மேலும் தலைமறைவாகியுள்ள இருவரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.