அப்பா நீங்களே இப்படி செய்யலாமா : பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் வாக்குமூலம்

அப்பா நீங்களே இப்படி செய்யலாமா : பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் வாக்குமூலம்

அப்பா நீங்களே இப்படி செய்யலாமா : பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் வாக்குமூலம்
Published on

ஹைதராபாத்தில் 13வயது சிறுமி அவரது தாயின் இரண்டாவது கணவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். 

காஷ்மீரில் 8வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லையா என்று கேட்கத்தோன்றும் வகையில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் பதிவாகி வருகிறது. 

இந்நிலையில் ஹைதராபாத்தில் 13வயது சிறுமி தனது முதல் மாதவிடாய் காலத்திற்கு பின் வளர்ப்பு தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். இந்தச் சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்கு பிறகு சிறுமியின் தாய் வேலைக்கு செல்வதாக கூறியுள்ளார். அப்போது நீ என்ன தனியா விட்டு போகாத என்று அந்தச் சிறுமி கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியிடம் கேட்கும் போது முதலில் பயத்தின் காரணமாக சொல்ல தயங்கியவர் தந்தையுடன் தனியாக இருக்க முடியாததை உணர்ந்து நடந்ததை கூறியுள்ளார். முதலில் சிறுமியின் குற்றச்சாட்டை மறுத்த அவரது தந்தை சிறுமி பொய் கூறுவதாக தெரிவித்தார். அதன் பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார். குடிபோதையின் காரணமாக தான் இவ்வாறு நடந்துக் கொண்டதாகவும் இனி இதுபோல் நடைபெறாது எனக் கூறி காலில் விழுந்து கதறி அழுதுள்ளார். அவரது பேச்சை கேட்டு இந்த விவகாரத்தை அப்படியே விட்டுவிட்டனர். இந்தச் சம்பவம் கடந்த ஏபரல் மாதம் நடந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் அவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த முறை தாயிடம் சொன்னதற்காக கடுமையாக தாக்கி நடந்தவற்றை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். வேலைக்கு சென்றிருந்த சிறுமியின் தாய் வீட்டிற்கு திரும்பியதும் வழக்கம்போல உற்சாகம் இல்லாமல் மகள் படுத்திருப்பதை கவனித்துள்ளார். அப்போது தேம்பி தேம்பி அழுதவாறு சிறுமி இருந்துள்ளார். இதனை வைத்து வீட்டில் என்ன நடந்திருக்கும் என்பதை அவர் யூகித்துக்கொண்டார். இதுதொடர்பாக கணவரிடம் கேட்டபோது அவர் இவர்களை  வெளியில் விரட்டி விட்டார். உடனடியாக சிறுமியும் அவரது தாயும் காவல் நிலையம் சென்று இது தொடர்பாக புகார் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் வளர்ப்பு தந்தை அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து சிறுமியின் தாயை தொடர்பு கொண்டவர் தன்னை மன்னித்து விடுமாறு கூறியுள்ளார். சிறுமியின் படிப்பிற்கு தேவையான பணத்தை அவளது பெயரில் வங்கியில் செலுத்தி விடுவதாக கூறி வழக்கை வாபஸ் பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கொடூரத்தை அந்த சிறுமி கூறுகையில்,  “ அம்மாகிட்ட சொன்னதுக்காக என்னை அடிச்சார். எட்டி உதைச்சார். நான் பாத்ரூம்குள்ள ஓடி போய் கதவ சாதிக்கிட்டேன். ஆனா அவர் கதவை உடைச்சுக்கிட்டு உள்ளே வந்துட்டார். பெல்ட்டால என்னை அடிச்சார். என்னை கட்டாயப்படுத்தினார். நான் சத்தம் போட்டது எங்க பக்கத்து வீட்ல இருந்தவங்களுக்கு கேட்டிருக்கும் ஆனா யாரும் உதவி செய்ய வரல. அவங்களுக்கு இவர் என் அப்பா இல்லனு தெரியாது. 8வருசத்துக்கு முன்னாடி தான் எங்க அம்மா இவர கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. என் தம்பிக்கு கூட இது தெரியாது. நாங்க மூனு போலீஸ் ஸ்டேசனுக்கு போனோம் அதுக்கபுறம் தான் எங்க புகார ஏத்துக்கிட்டாங்க” என்று கூறினார்.

இதற்கிடையில் குழந்தைகள் உரிமை ஆணையத்திடம் பேசிய சிறுமி,  “நான் என் வீட்டில் பாதுகாப்பாக இல்லை. இந்த சம்பவம் மறுபடியும் நடக்கும். நான் அப்பாகிட்ட சொன்னேன் இப்படி செய்யாதீங்கன்னு அவரு கேட்கவே இல்ல. நான் ஹாஸ்டல்ல போய் தங்கி போலீஸ் ஆகனும்கிற என் கனவு  நிறைவேற்றிகிறேன்”எனக் கூறினார்.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா ஓடும் பஸ்சில் கூட்டுபாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்திற்கு பிறகு பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது. ஆனால் சிறார்களை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஆயுள்தண்டனை விதிக்கும் ஷரத்து மட்டுமே இருந்தது. காஷ்மீரில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்த விவகாரத்துக்கு பின் போக்சோ சட்டத்தில் சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்யும் நபர்களுக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்கும் சட்டம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com