குற்றம்
கர்நாடகா: சுங்கக் கட்டணம் கேட்ட ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல்
கர்நாடகா: சுங்கக் கட்டணம் கேட்ட ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல்
கர்நாடகாவில் சுங்கக் கட்டணம் கேட்ட ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் தும்கூர் தேசிய நெடுஞ்சாலையில் நில மங்களா அருகே உள்ள சுங்கச் சாவடியில் காரில் வந்தவர்களிடம் ஊழியர்கள் சுங்கக் கட்டணம் கேட்டுள்ளனர். காரில் போதையில் இருந்த 7 பேர் கொண்ட கும்பல், சுங்கக் கட்டணம் கொடுக்காமல் ஊழியர்களை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடினர். சிசிடிவி காட்சி அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 7 பேர் கும்பலை தேடி வருகின்றனர்.

