இளைஞர் கொலை... இருவர் கைது
இளைஞர் கொலை... இருவர் கைதுpt desk

கடலூர் | முறை தவறிய காதல் - தட்டிக்கேட்டதால் நடந்த கொலை... இருவர் கைது

சிதம்பரத்தில் தங்கை முறை கொண்ட பெண்ணை காதலித்த இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: ஆர்.மோகன்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வெள்ளகுளம் மேலக்கரை பகுதியில் வசித்து வருபவர் காளிதாஸ். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சிதம்பரம் நகரப் பகுதியான காசிமட தெருவில் சால்ட் அண்ட் பெப்பர் என்ற பெயரில் கடந்த ஆறு வருடங்களாக அழகு நிலையம் நடத்தி வருகிறார், இந்நிலையில் இவரது தூரத்து உறவிளரான புதுச்சேரி லாஸ்பேட்டை எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மணி என்ற வேலுமணி (23) என்பவர் இவரது கடையில் வேலை பார்த்து வந்தார்,

இவர் காளிதாசன் வீட்டில் தங்கி வேலை செய்யும் போது காளிதாஸின் அண்ணன் கோவிந்தராஜ் மகளுக்கும் வேலுமணிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது, இளைஞர் வேல்மணிக்கு கோவிந்தராஜன் மகளுக்கும் அண்ணன் தங்கை உறவுமுறை என்பதால் இருவரின் காதலுக்கும் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதில், காளிதாஸ், வேலுமணியை கண்டித்து வேலையை விட்டு நிறுத்தியுள்ளார், இதனால் காளிதாஸ் மீது கோபமடைந்த வேலுமணி அவரது நண்பரான விக்னேஷ் இருவரும் சேர்ந்து காளிதாஸை வெட்டியுள்ளனர். இதில், பலத்த காயமடைந்த காளிதாஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இளைஞர் கொலை... இருவர் கைது
ராமநாதபுரம் | குழந்தையை கொடூரமாக கொலை செய்த மாமன் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

இந்த சம்பவம் தொடர்பாக காளிதாசன் மனைவி காயத்ரி சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் போலீசார் வேலுமணியையும் உறுதுணையாக சென்ற விக்னேஷையும் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர், இந்த சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com