கடலூர் முந்திரி ஆலை தொழிலாளி கொலை: கைதானவர்களை அழைத்துச் சென்று விசாரணை

கடலூர் முந்திரி ஆலை தொழிலாளி கொலை: கைதானவர்களை அழைத்துச் சென்று விசாரணை
கடலூர் முந்திரி ஆலை தொழிலாளி கொலை: கைதானவர்களை அழைத்துச் சென்று விசாரணை

கடலூர் முந்திரி ஆலை தொழிலாளி கோவிந்தராசு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை, சிபிசிஐடி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

கடலூர் எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த மேல்மாம்பட்டைச் சேர்ந்த கோவிந்தராசு கடந்த 19ஆம் தேதி அடித்து கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக எம்.பி. ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜ், தொழிற்சாலை ஊழியர்கள் கந்தவேல், அல்லாபிச்சை, வினோத், சுந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.

அவர்களில் எம்.பி.ரமேஷை தவிர, மற்ற ஐவரை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி அனுமதி கோரியது. கடலூர் மாவட்ட கூடுதல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஒருநாள் மட்டும் அனுமதி வழங்கியது. இதையடுத்து அவர்கள் அனைவரையும் பணிக்கன்குப்பத்திலுள்ள முந்திரி ஆலைக்கு அழைத்து ல்லப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. இதனிடையே, கடலூர் எம்.பி. ரமேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை, கடலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com