கடலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 55 வயது முதியவர் போக்சோவில் கைது
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 55 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்துள்ள பெண்ணாடம் கருங்குழி தோப்பை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி பேரப்பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி, ராஜேந்திரனின் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது சிறுமியை அழைத்த ராஜேந்திரன், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது உடலில் வலி ஏற்பட்டதால் சிறுமி, இதுகுறித்து தனது தாயிடம் தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து சிறுமியின் தாய் பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு பரிந்துரை செய்தனர்.
அதன்பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.