\
பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை: வேடிக்கை பார்த்தக் கூட்டம்!

பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை: வேடிக்கை பார்த்தக் கூட்டம்!

பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை: வேடிக்கை பார்த்தக் கூட்டம்!
Published on

பட்டப்பகலில் இளம் பெண் ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு அதை தடுக்காமல் வீடியோ எடுத்தபடி மக்கள், வேடிக்கை பார்த்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விசாகப்பட்டினம் நியூ ரயில்வே காலனியில் உள்ள ஒரு மரத்தடியில் 23 வயது இளம்பெண் ஒருவர் நேற்று பகல் 2.30 மணியளவில் சோர்வாக அமர்ந்திருந்தார். அப்போது அங்கு போதையில் வந்த வாலிபர் ஒருவர், அந்தப் பெண்ணை அடித்து உதைத்தார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் சத்தம் போட்டனர். போதை வாலிபர் அவர்களை மிரட்டிவிட்டு, பின்னர் அங்கேயே அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். 

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை தடுக்காமல், அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து விரைந்து வந்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். அவர் அந்தப் பகுதியை சேர்ந்த லாரி கிளீனர், கஞ்சி சிவா என்பது தெரியவந்தது. அந்த இளம்பெண், கணவருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, வீட்டில் இருந்து வந்து இந்த மரத்தினடியில் தங்கியிருந்தார் என்றும் அப்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

பட்டப்பகலில் நடந்த பாலியல் வன்முறையை தடுக்காமல் பொதுமக்கள் வேடிக்கைப் பார்த்தபடி வீடியோ எடுத்தது அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com