பெட்ரோல் குண்டு வீசியவர் கைது... ஆளுநரை நேரில் சந்தித்தார் சென்னை ஆணையர்! முழு பின்னணி

ஆளுநர் மாளிகை வாசல் முன் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கருக்கா வினோத்
கருக்கா வினோத்புதிய தலைமுறை

ஆளுநர் மாளிகை வாசல் முன் பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி கருக்கா வினோத், புழல் சிறையில் அடைக்கப்பட்டார். வெடிபொருள் தடைச் சட்டம், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "புதன்கிழமை பிற்பகலில் சர்தார் படேல் சாலை வழியாக அடையாளம் தெரியாத நபர் நடந்து வந்தார். அவர் நான்கு பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை கொண்டு வந்திருக்கிறார்.

கருக்கா வினோத்
திருச்சி: துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி வீட்டில் 52 பவுன் நகை கொள்ளை - மூன்று பேர் கைது

பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்களை ஆளுநர் மாளிகை நோக்கி எறிய முற்பட்டபோது, பணியில் இருந்த பாதுகாப்பு காவல்துறையினர் அவரை தடுத்துள்ளனர். அப்போது அவர் எறிய முற்பட்ட இரண்டு பாட்டில்கள் வெளிப்புற சாலையில் விழுந்துவிட்டது. பின்னர் பாதுகாப்பு காவலர்களால் அவர் மடக்கி பிடிக்கப்பட்டார்.

அவரிடமிருந்து பெட்ரோல் நிரப்பப்பட்ட இரண்டு பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆளுநர் மாளிகையை சுற்றி எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பந்தப்பட்ட நபர், நந்தனத்தை சேர்ந்த கருக்கா வினோத். இவர் மீது தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் 'C' வகை சரித்திர குற்றவாளி பதிவேடு பராமரிக்கப்பட்டு வருகிறது. பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த ஆண்டு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு உட்பட 14 குற்ற வழக்குகள் கருக்கா வினோத்மீது இருக்கிறது.

மேலும் கருக்கா வினோத் மீது வெடிபொருள் தடைச் சட்டம், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட கருக்கா வினோத், நவம்பர் 9ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்படுவார்.

இதனை தொடர்ந்து தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சென்னை ராஜ்பவனில் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் சந்தித்துள்ளார். இன்று சென்னை வந்துள்ள குடியரசுத்லைவர் திரௌபதி முர்மு, இன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்கவுள்ள நிலையில் பாதுகாப்புக்கு என்னென்ன நடவடிக்கைகள் செய்யப்பட்டிருக்கிறது என ஆலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com