குற்றம்
கோவையில் ஆட்டோ மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார்: சிசிடிவி காட்சிகள்
கோவையில் ஆட்டோ மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார்: சிசிடிவி காட்சிகள்
கோவையில் ஆட்டோ மீது கார் மோதும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. துடியலுரை அடுத்த தொப்பம்பட்டி பிரிவு அருகே சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோ மீது பின்னால் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து சாலை நடுவில் இருந்த மின் கம்பத்தில் மோதி சேதமடைந்தது. இதில் பலத்த காயமடைந்த ஆட்டோ ஓட்டுநர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். இந்நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன. மோதிய வேகத்தில் காரின் முன்பக்க நம்பர் பிளேட் அங்கேயே கழன்று விழுந்துவிட்டது. இதனை வைத்து துடியலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.