\
யூடியூபர் மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி - மனைவி கிருத்திகாவுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

யூடியூபர் மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி - மனைவி கிருத்திகாவுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

யூடியூபர் மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி - மனைவி கிருத்திகாவுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்
Published on

யூடியூபர் மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த சைதாப்பேட்டை நீதிமன்றம், அவரது மனைவி கிருத்திக்காவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மதனின் யூடியூப் சேனல்களுக்கு அட்மினாக இருந்ததால் அவரது மனைவி கிருத்திகாவை கடந்த 16 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கிருத்திகாவுடன் 8 மாத குழந்தையும் சிறையில் இருந்து வந்தது.

இந்நிலையில், ஜாமீன் வழங்கக் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கிருத்திகா மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணைக்கு பிறகு, 8 மாத கைக் குழந்தையை கருத்தில் கொண்டு சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் ஜாமீன் கேட்டு பப்ஜி மதன் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. யூடியூபில் ஆபாசமாக பேசி வீடியோ பதிவேற்றம் செய்ததாகவும் அதன் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகவும் எழுந்த புகாரில் பப்ஜி மதன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com