மதுரை சிறையில் ரூ.100 கோடிக்கு ஊழல் நடந்ததாக எழுந்த புகார் - நீதிமன்றம் புதிய உத்தரவு

மதுரை சிறையில் ரூ.100 கோடிக்கு ஊழல் நடந்ததாக எழுந்த புகார் - நீதிமன்றம் புதிய உத்தரவு

மதுரை சிறையில் ரூ.100 கோடிக்கு ஊழல் நடந்ததாக எழுந்த புகார் - நீதிமன்றம் புதிய உத்தரவு
Published on

முந்தைய ஆட்சியில், மதுரை சிறையில் நடந்ததாகக் கூறப்படும் நூறு கோடி ரூபாய் ஊழல் குறித்து விசாரணை நடத்தக்கோரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், சிறைக்கைதிகள் உரிமைய இயக்குநருமான புகழேந்தி தாக்கல் செய்துள்ள மனுவில், மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரித்தப் பொருட்களை அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்களுக்கு அனுப்பியதாக போலி கணக்கு எழுதி ஊழல் செய்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

2016 முதல் 2021 வரையிலான இந்த ஊழலில் 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நிகழ்ந்திருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இதில் அப்போதைய சிறைக் கண்காணிப்பாளர், டிஐஜிக்களுக்கு தொடர்பு உள்ளது எனவும் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, ஊழல் புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து நிவாரணம் பெற அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com