காதல் ஜோடி
காதல் ஜோடிட்விட்டர்

”புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்” பைக்கில் ரொமான்ஸ் செய்தபடி சென்ற காதல் ஜோடி! கொந்தளித்த நெட்டிசன்கள்

இதுபோன்ற போக்குவரத்து விதிமீறல்களை யாரேனும் ஈடுபட்டால் டெல்லி போக்குவரத்து காவல்துறை செயலியில் உடனடியாக புகாரளிக்குமாறு கேட்டுக் கெட்டுக்கொண்டுள்ளனர்
Published on

டெல்லியில் இளைஞர் ஒருவர் பைக்கை ஓட்டிச் செல்லும் போது பெண் ஒருவரை கட்டிப்பிடித்துக் கொண்டு செல்வது போன்ற வீடியோவானது இணையத்தில் வைரலானது. சமீப காலங்களில் பொது சாலையில் வாகனத்தில் சாகசம் செய்வது போன்ற வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகின்றன. அதே வேலையில் இளம் ஜோடிகள் பைக்குகளில் வேகமாக செல்லும் போது பொதுமக்கள் பாசத்தை வெளிப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் புது டெல்லியில் அது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. வைரலாகி வரும் வீடியோவில், ஒரு ஜோடி பைக்கில் கட்டி பிடித்தபடி சாலையில் அதிவேகத்தில் பயணம் செய்வது போன்றுள்ளது. அதாவது, பைக்கை அந்த நபர் முன்னே பார்த்தபடி ஓட்ட, பெட்ரோல் டேங்கில் எதிர்திசையில் அந்த நபரின் முகத்தை பார்த்தபடி (கட்டிபிடித்தப்படி) அந்த பெண் அமர்ந்திருந்தார்.

ட்விட்டர் பக்கத்தில் வெளியான அந்த வீடியோவிற்கு பதிலளித்த டெல்லி போக்குவரத்து காவல்துறை, 'நன்றி தெரிவிதுள்ளது. இதுபோன்ற போக்குவரத்து விதிமீறல்களை டெல்லி போக்குவரத்து காவல்துறை செயலியில் புகாரளிக்குமாறு கேட்டுக் கெட்டுக்கொண்டுள்ளனர்.

அந்த பெண் ஹெல்மெட் அணியவில்லை என்றும் அவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

விதிமீறலுடன் செயல்பட்ட அந்த ஜோடிக்கு நிச்சயம் சிறை தண்டனை அளிக்க வேண்டும் என்று சிலர் வலியுறுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com