குழந்தை பிறந்த அடுத்த நொடியே தெருவில் வீசிய தம்பதி... சிசிடிவி வீடியோவால் வெளியான உண்மை

குழந்தை பிறந்த அடுத்த நொடியே தெருவில் வீசிய தம்பதி... சிசிடிவி வீடியோவால் வெளியான உண்மை

குழந்தை பிறந்த அடுத்த நொடியே தெருவில் வீசிய தம்பதி... சிசிடிவி வீடியோவால் வெளியான உண்மை
Published on

கேரளாவில் பிறந்த குழந்தையை அநாதையாக வீசி விட்டுச் சென்ற பெற்றோரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அமல்குமார்(வயது 31) மற்றும் அபர்ணா(வயது 26). இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. கருத்துவேறுபாடு காரணமாக கணவனும் மனைவியும் பிரிந்து வாழ்ந்திருக்கின்றனர். இதற்கிடையே பெருவந்தவனம் பகுதியைச் சேர்ந்த வேறொருடன் ஏற்பட்ட திருமணத்தை மீறிய உறவின் காரணமாக அபர்ணா கர்ப்பமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் அமல்ராஜுக்கு தெரியவந்திருக்கிறது.

விவாகரத்து பெற்றுவிட்டால் தங்கள் 2 வயது குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடுமே என கவலையுற்றாலும், இந்த விவகாரத்தால் அமல்ராஜ் மீண்டும் அபர்ணாவுடன் இணைந்து வாழ சிறிது தயக்கம்காட்டி இருக்கிறார். இதற்கிடையே தன் வயிற்றில் வளரும் குழந்தைக்குக் காரணமாக தனது காதலர் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டதாக அபர்ணா, அமல்ராஜிடம் கூறியிருக்கிறார்.

எனவே, அந்தக் குழந்தையை விட்டுவிட்டு வந்தால்தான் தன்னுடன் வாழ ஏற்றுக்கொள்வேன் என அமல்ராஜ் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அபர்ணாவுக்கு பிரசவலி ஏற்படவே, அமல்ராஜை தொடர்புகொண்டு அழைத்திருக்கிறார். ஆனால் தொடுபுழா மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் காரிலேயே குழந்தை பிறந்திருக்கிறது. அருகிலிருந்த மெடிக்கலுக்குச் சென்று இரண்டு கத்தரிக்கோல்களை வாங்கிய வந்திருக்கிறார் அமல்ராஜ். பிறகு அபர்ணா காரில் வைத்து தானே தொப்புள்கொடியை அறுத்துவிட்டு, குழந்தையை சுத்தப்படுத்தி பன்னிமட்டம் அருகில் அநாதையாக விட்டுச் சென்றிருக்கின்றனர்.

இந்த விஷயம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகி இருக்கிறது. அந்தக் காட்சிப்பதிவுகளிலிருந்து கார் நம்பரை வைத்து அவர்களை அடையாளம் கண்டுகொண்ட போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இருவரையும் கைதுசெய்திருக்கின்றனர். அபர்ணாவை தொடுபுழா மருத்துவமனையில் அனுமத்தித்துள்ள போலீஸார் அவர் காதலர் இறந்ததுவிட்டது உண்மைதானா என விசாரித்துவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com