ஊழல் வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் கணவர் பாபுவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சண்முகத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.
மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி நடத்துவதாகக்கூறி இந்திரகுமாரியின் கணவர் பாபு அரசிடம் இருந்து ரூ.15.45 லட்சம் முறைகேடாக பெற்றதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, அவரின் கணவர் பாபு, சண்முகம் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1991 -96 காலகட்டத்தில் அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்தபோது இந்த முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி தற்போது திமுகவில் இருந்து வருகிறார்.