நடிகர்களுக்கு மியாவ் மியாவ் சப்ளை செய்தவர் கைது

நடிகர்களுக்கு மியாவ் மியாவ் சப்ளை செய்தவர் கைது

நடிகர்களுக்கு மியாவ் மியாவ் சப்ளை செய்தவர் கைது
Published on

நடிகர்களுக்கு மியாவ் மியாவ் என்ற போதை பொருளை சப்ளை செய்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை பாந்த்ரா, எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானம் அருகே போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாக வந்த தகவலை அடுத்து, போதை தடுப்பு பிரிவு போலீசார், விவேக் லுல்லா என்ற விக்கி (42) என்பவரை பிடித்தனர். அவரிடம் இருந்து மெபட்ரோன் என்ற போதை பொருளை கைப்பற்றினர். இதற்கு, மியாவ் மியாவ் அல்லது எம்.டி. என்ற பெயர் சங்கேத வார்த்தையாக பயன்பட்டு வருகிறது. பின்னர் அதை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு, பல லட்சம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தினர். அதில் அவர், இந்தி நடிகர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவருடன் போதைப்பொருள் விற்பனையில் தொடர்புடைய பெண்கள் உள்பட மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com