நீதிபதி மகளிடம் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்: போலீஸ் விசாரணை

நீதிபதி மகளிடம் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்: போலீஸ் விசாரணை
நீதிபதி மகளிடம் கைவரிசையை காட்டிய கொள்ளையர்கள்: போலீஸ் விசாரணை

சென்னையில் நீதிபதி மகள் மற்றும் மூதாட்டியிடம் கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீதிபதி மகளிடம் செல்போன் பறிப்பு

சைதாப்பேட்டை நீதிபதிகள் குடியிருப்பில் வசித்துவரக்கூடிய குடும்ப நல நீதிபதியின் மகள் அபூர்வா. கல்லூரி மாணவி. இவர் நேற்று சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனி தெற்கு மாடவீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்து 15,000 மதிப்புள்ள செல்போனை அபூர்வாவிடம் இருந்து பறித்து சென்றனர். இதுதொடர்பாக அபூர்வா அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூதாட்டியிடம் நகைபறிப்பு

சென்னை அபிராமபுரம் ஸ்ரீராம் காலனியைச் சேர்ந்தவர் யசோதா(72). இவர் நேற்றிரவு ராமசாமி தெருவில் எக்ஸ் ரே சென்டருக்குகு சென்று விட்டு மன்னா தெரு வழியாக நடந்து வந்துகொண்டிருந்த போது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து யசோதாவின் கழுத்திலிருந்து 7 சவரன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்து அபிராமபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com