கார் கண்ணாடியை உடைத்து கொள்ளை - கண்டுபிடிக்கும் முனைப்பில் காவல்துறை
சென்னையில் கார் கண்ணாடிகளை உடைத்து நடைபெறும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஆனால் குற்றவாளி யார் என கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர். இதுவரை சம்பவம் நடைபெற்ற இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி, தடயங்கள் ஆகியவற்றவை வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் விசாரணை நடக்கும் போது சென்னையில் மீண்டும் சில இடங்களில் கார் கண்ணாடியை உடைத்து கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
Read Also -> போலி செய்திகளுக்கு எதிரான போர் அவசியம்!
கடந்த சில நாட்களுக்கு முன்பு கார் கண்ணாடியை உடைத்து நடைபெற்ற நான்கு கொள்ளை சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை அண்ணாநகர் 3வது அவென்யூவில் ரபி அகமது என்பவரின் கார் கண்ணாடியை உடைத்து 2 செல்போன்கள், 15 ஆயிரம் ரொக்கம் நேற்றிரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனையெடுத்து தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்க்கு வந்த அண்ணாநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read Also -> ரஃபேல் விமான சர்ச்சை: பிரான்ஸ் அரசு விளக்கம்
கடந்த ஒருவாரத்தில் அண்ணாநகரில் இதேபோல் 4 கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது. கண்காணிப்பு கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதற்கிடையில் இம்மதிரியான கொள்ளை சம்பவங்களில் ஒரு நபர் அல்லது ஒரே கும்பல் தான் அரங்கேற்றி வருவதாகவும் விரைவில் கைது செய்து விடுவதாகவும் என காவல்துறையினர் கூறுகின்றனர். மேலும் அண்ணாநகர் வீட்டு வசதி வாரிய அலுவலக வளாகத்தில் இம்மதிரியான கொள்ளை சம்பவங்கள் சமீப காலமாக நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.