\
சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த கட்டடத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த கட்டடத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த கட்டடத் தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
Published on: 

18 வயது நிரம்பாத மாணவியிடம், ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்த கட்டடத்தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

தாராபுரம் அடுத்த குண்டடம் பகுதியைச் சேர்ந்த வயது கல்லூரி மாணவி (17) ஒருவர் பொள்ளாச்சிப் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவருக்கும் அரக்கோணத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி (22 தட்சிணாமூர்த்திக்கும் ஃபேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறிய நிலையில் மூர்த்தி மாணவியை திருமணம் செய்துகொள்வதாக கூறி கடந்த 31 ஆம் தேதி கடத்தி சென்றுள்ளார்.

இதனையடுத்து சிறுமியின் தந்தை, மகள் மாயமானது குறித்து குண்டடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மாணவி அரக்கோணத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறை கல்லூரி மாணவியை மீட்டனர்.

அதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கல்லூரியில் இருந்து  சிறுமியை அழைத்துச் சென்ற மூர்த்தி, அங்குள்ள கோயில் ஒன்றில் திருமணம் செய்ததும் மாணவிக்கு 18 வயது நிறைவாகவில்லை என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து தட்சிணாமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com