
பெண் காலவர் ஒருவர் மினி பேருந்து நடத்துனரை கன்னத்தில் அறைந்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.
சென்னை தாம்பரம் அருகே மினி பேருந்து நடத்துனரை பெண் ஒருவர் காவலர் கன்னத்தில் அறைந்ததுள்ளார். குரோம்பேட்டையிலிருந்து காமராஜபுரம் வரை செல்லக்கூடிய மினி பேருந்தில் விஜயகுமார் என்பவர் நடத்துனராக பணியாற்றி வருகிறார்.
லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய ஐந்து பேர், ஒரு குழந்தையை விடுத்து மற்றவர்களுக்கு டிக்கெட் எடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு நடத்துனர் மூன்று வயதிற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கண்டிப்பாக கூறியுள்ளார். அது தொடர்பாக வாக்கு வாதம் முற்றியுள்ளது. அதற்கு கிண்டி மகளிர் காவல் நிலைய பெண் காவலர் வித்யா என்பவர் நடத்துனர் கன்னத்தில் அறைந்ததாக தெரிய வருகிறது. இதனையடுத்து குரோம்பேட்டை காவல்நிலையத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது காவலர் வித்யா மீது புகார் அளித்துள்ளனர்.