’பவர் ஸ்டார்’ மீது மோசடி புகார்

’பவர் ஸ்டார்’ மீது மோசடி புகார்

’பவர் ஸ்டார்’ மீது மோசடி புகார்
Published on

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மோசடி செய்ததாக சென்னை புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

புதுவண்ணாரப்பேட்டை இந்திராகாந்தி நகரைச் சேர்ந்தவர் தயாநிதி. இவர் போலீசில் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், 2014 ஆம் வருடம் எனக்கு பழக்கமானார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருமாறு அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் ரூ.4 லட்சம் பணம் கேட்டார். நானும் பணத்தை கொடுத்தேன். ஆனால் சினிமாவிலும் நடிக்க வைக்கவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. என் பணத்தை மோசடி செய்துவிட்டார். அதை மீட்டுத் தரவேண்டும்’ என்று கூறியுள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com