ஆயுதங்களுடன் அலைந்த கல்லூரி மாணவர்கள்: விரட்டிப் பிடித்த போலீஸ்
சென்னை பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் பட்டா கத்திகளுடன் அட்டகாசம் செய்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலில், மாணவர்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாக ரயில்வே பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு விரைந்த காவலர்கள் ஆயுதம் வைத்திருப்பதாகக் கூறப்பட்டவர்களை போலிசார் தேடினார். போலிசாரை பார்த்ததும் மாணவர்கள் ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தனர். அவர்களை விரட்டிய காவல்துறையினர் மாணவர்களை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்கள் பச்சையப்பன் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் கவியரசு, மருதுபாண்டி, சோமசுந்தரம் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 4 கத்திகள், பட்டாசு உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்த காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

