கூடமலை: காதலிக்க மறுத்ததாக கல்லூரி மாணவியை கொடூரமாக கொலை செய்த இளைஞர்

கூடமலை: காதலிக்க மறுத்ததாக கல்லூரி மாணவியை கொடூரமாக கொலை செய்த இளைஞர்

கூடமலை: காதலிக்க மறுத்ததாக கல்லூரி மாணவியை கொடூரமாக கொலை செய்த இளைஞர்
Published on

ஆத்தூர் அருகே காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை காதலிக்க வற்புறுத்தி இளைஞர் ஒருவர் கல்லால் தலையில் அடித்துக் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை ஊராட்சியைச் மாற்றுத்திறனாளியான விவசாயி முருகேசன். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும் நந்தினி, ரோஜா ஆகிய இரண்டு மகள்களும் விஜய் என்கிற ஒரு மகனும் உள்ளனர்,

இந்நிலையில் முருகேசன் கூடமலையில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் உள்ள சின்னசாமி என்பவருடைய தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து குடும்பத்துடன் தோட்டத்திலேயே தங்கி விவசாயம் செய்து வருகிறார். முருகேசனின் இரண்டாவது மகள் ரோஜா ஆத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி,ஏ, தமிழ் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இதனிடையே ஆத்தூர் அருகே உள்ள தாண்டவராயபுரம் பகுதியைச் சேர்ந்த நீலக்கிருஷ்ணன் என்பவரின் மகன் சாமிதுரை, கூடமலையில் உள்ள தனது பெரியப்பா சின்னதுரையின் வீட்டிற்குச் சென்றபோது கல்லூரி மாணவி ரோஜாவை பார்த்துள்ளார். அதிலிருந்து மாணவியை ஒரு தலை பட்சமாக காதலித்து வந்தாக கூறப்படுகிறது.

இதையடுத்து அடிக்கடி மாணவியின் ஊருக்குச் சென்ற சாமிதுரை பேருந்தில் கல்லூரிக்குச் செல்லும்போது மாணவியை காதலிக்க வலியுறுத்தி கட்டாய படுத்தியுள்ளதோடு திருமணம் செய்ய வலியுறுத்தி கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் மாணவியின் உறவினர்களுக்கு தெரியவந்ததால் ஊரின் முக்கியஸ்தர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சாமிதுரை ரோஜா வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு தோட்டத்திற்குச் சென்று ரோஜாவிடம் என்னை காதலித்து திருமணம் செய்து கொள் இல்லையென்றால் உன்னை கொன்று விடுவேன் எனக்கூறியதாக தெரிகிறது.

இதற்கு ரோஜா மறுப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த சாமிதுரை, தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை ரோஜா மீது ஊற்றியுள்ளார். பின்னர் ரோஜாவை கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து மிதித்துக் கொண்டு கல்லை தூக்கி தலையில் போட்டு கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டார். இதை தடுக்க முயன்ற குடும்பத்தைரையும் கீழே தள்ளி விட்டு கொடூரமாக தாக்கியுள்ளார்.

இதையடுத்து உடனே ரோஜாவை மீட்டு சிகிச்சைக்காக கூடமலை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு ரோஜாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆத்தூர் டிஎஸ்பி, ராமச்சந்திரன் நேரில் விசாரனை மேற்கொண்டு தப்பியோடிய இளைஞரை தேடிவருகின்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com