\
தாம்பரம்: ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி குத்திக்கொலை; குத்தியவரும் தற்கொலை முயற்சி

தாம்பரம்: ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி குத்திக்கொலை; குத்தியவரும் தற்கொலை முயற்சி

தாம்பரம்: ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி குத்திக்கொலை; குத்தியவரும் தற்கொலை முயற்சி
Published on

தாம்பரம் ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டிருக்கிறார். மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் ராமு, தானும் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியை செய்துள்ளார்.

கத்திக்குத்தில் காயமடைந்த மாணவி ஸ்வேதாவுக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்திருக்கிறார். காதல் விவகாரத்தில் மாணவியை இளைஞர் கொலை செய்தாரா என்பது குறித்து சேலையூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பட்டப்பகலில் ரயில் நிலைய வாயிலில் நடந்த இந்த கொலை சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற இளம்பெண் இதேபோல வாலிபர் ஒருவரால் கொலை செய்யப்பட்டிருந்தார். இச்சம்பவங்கள் அனைத்தும் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com