ரயில் நிலைய வாயிலில் கொலை செய்யப்பட்ட மாணவி; காதல் விவகாரமென கைதானவர் வாக்குமூலம்
தாம்பரம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி ஸ்வேதாவை கொலை செய்தது, காதல் விவகாரத்தில்தான் என அவரை கத்தியால் குத்திய இளைஞர் முதற்கட்ட தகவலில் தெரிவித்துள்ளார்.
தாம்பரம் ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவியொருவர், இன்று மதியம் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் ராமச்சந்திரன் (வயது 25) என்பவர், தானும் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியை செய்திருந்தார். இருவரும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு மாணவி உயிரிழந்துவிட்டார். இளைஞர் ராமச்சந்திரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை பெற்று வரும் இளைஞர் ராமசந்திரனிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மாணவி ஸ்வேதா மீது கொண்ட காதல் விவகாரத்தினால்தான் அவரை தான் கத்தியால் குத்தி கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
தொடர்ந்து போலீசார் பெண் தரப்பில் விசாரணை மேற்கொண்டு கொலைக்கான காரணம் குறித்து அறிய உள்ளனர். சமபவம் தொடர்பாக நிகழ்விடத்தில் பரங்கிமலை துணை ஆணையர் அருண்பாலகோபாலன் ஆய்வு மேற்கொண்டார்.