கோவை: பட்டப்பகலில் பள்ளி மாணவனை வெட்டிக் கொலை செய்த கல்லூரி மாணவன் - காரணம் என்ன?

கோவையில் பட்டப் பகலில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பேருந்து நிலையத்தின் அருகே 12-ஆம் வகுப்பு மாணவனை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Death
DeathFile Photo

செய்தியாளர்: பிரவீண் குமார்

கோவை ஒண்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த +2 மாணவன் பிரணவ். இவர் இன்று காலை ஒண்டிப்புதூர் மேம்பாலம் அருகே உள்ள இனிப்பு கடை ஒன்றின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கல்லூரி மாணவர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளைக் கொண்டு பிரணவை வெட்டியுள்ளார். இதில், பிரணவ் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

school students
school studentspt desk

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் காதல் விவகாரம் தொடர்பாக இளைஞர் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொலை செய்த இளைஞர் சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கோவையில் பட்டப் பகலில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com