பேய் விரட்டுவதகாகக்கூறி பெண் பூசாரி சாட்டையால் தாக்கியதில் கல்லூரி மாணவி உயிரிழப்பு!

பேய் விரட்டுவதகாகக்கூறி பெண் பூசாரி சாட்டையால் தாக்கியதில் கல்லூரி மாணவி உயிரிழப்பு!
பேய் விரட்டுவதகாகக்கூறி பெண் பூசாரி சாட்டையால் தாக்கியதில் கல்லூரி மாணவி உயிரிழப்பு!

பேய் விரட்டுவதகாகக் கூறி பெண் பூசாரி சாட்டையால் தாக்கியதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்த தாரணி. தனியார் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வந்தார். தாயின் நினைவிடத்துக்குச் சென்று வந்த அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு பேய் பிடித்துவிட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் அச்சமடைந்த தந்தை வீரசெல்வம், பெண் பூசாரி ஒருவரிடம் பேய் விரட்டுவதற்காக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர் சாட்டையால் தாக்கியதில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தாரணி, வீட்டில் உயிரிழந்தார். அவருக்கு டைஃபாய்ட் காய்ச்சல் இருந்தது பரிசோதனையில் தெரியவந்துள்ள நிலையில், சிகிச்சை அளிக்காமல், பேய் விரட்ட அழைத்துச் சென்றதே உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com