கல்லூரி மாணவி கழுத்து அறுத்து கொலை - பொள்ளாச்சியில் பயங்கரம்

கல்லூரி மாணவி கழுத்து அறுத்து கொலை - பொள்ளாச்சியில் பயங்கரம்

கல்லூரி மாணவி கழுத்து அறுத்து கொலை - பொள்ளாச்சியில் பயங்கரம்
Published on

பொள்ளாச்சி அருகே கல்லூரி மாணவி ஒருவர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் பிரகதி. இவர் கோவை தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் ஜவுளி எடுக்க துணிக்கடைக்கு தனியாக சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இன்று காலை கோவை காட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இந்நிலையில் பொள்ளாச்சி அருகே தாராபுரம் சாலையில் பூசாரிபட்டி என்ற இடத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்து சாலையோரம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இறந்து கிடந்த பெண் பிரகதி என்பதை உறுதி செய்தனர்.

பின்னர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது பணம், நகைகளுக்காக கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இளம்பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com