\
கோவை: மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவர்; தற்கொலை செய்து கொண்ட மாணவி

கோவை: மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவர்; தற்கொலை செய்து கொண்ட மாணவி

கோவை: மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவர்; தற்கொலை செய்து கொண்ட மாணவி
Published on

கோவையில் கல்லூரி மாணவர் ஒருவர் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றி இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியதால், மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்த மாணவி லாவண்யா கடந்த 11-ஆம் தேதி எலி மருந்து சாப்பிட்டதை அடுத்து சிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியபோது, மாணவியுடன் பழகி வந்த கேசவகுமார் என்ற மாணவர் 35 ஆயிரம் ரூபாய் வரை பணம், 2 சவரன் நகையை வாங்கிக் கொண்டு திரும்ப கொடுக்காமல் ஏமாற்றியதாக தெரிகிறது.

இதனையடுத்து மாணவி அவருடன் பழகுவதை நிறுத்தியதால், இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி உயிரிழந்ததை அடுத்து, அவர் தந்தை அளித்த புகாரின் பேரில் கேசவகுமாரை போலீஸார் தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com