மோசடி செய்த பெண் கைது
மோசடி செய்த பெண் கைது pt desk

கோவை: திருமண செயலி மூலம் பல ஆண்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக பெண் கைது!

கோவையில், திருமண செயலியை பயன்படுத்தி பல ஆண்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண்ணை கோவை மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: பிரவீண்

பொள்ளாச்சியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனக்கு வரன் தேடி செயலிகள் மூலம் பதிவு செய்துள்ளார். அப்போது அவருக்கு பிரியா என்ற பெண் பழக்கமாகியுள்ளார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்து இருந்த நிலையில், பிரியா தனது அக்காவின் மருத்துவச் செலவிற்காக கடந்த ஒரு வருடத்தில் சுமார் ஏழு லட்சம் ரூபாய் வரை அந்த விவசாயியிடம் பெற்றுள்ளார். பின்னர் விவசாயி உடனான திருமணத்தை பல்வேறு காரணங்களை கூறி தட்டிக் கழித்த பிரியா, ஒரு கட்டத்தில் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

இதையடுத்து அந்த விவசாயி, பிரியா கொடுத்த நாமக்கல் விலாசத்திற்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது பிரியா கொடுத்த முகவரி போலியானது என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக சைபர் குற்றங்கள் பிரிவில் விவசாயி புகார் அளித்ததை அடுத்து வங்கி கணக்கை சோதனையிட்ட காவல்துறையினர் பிரியா, சேலம் மாவட்டம் வாழப்பாடிகைச் சேர்ந்தவர் என்பதை கண்டறிந்தனர்.

மோசடி செய்த பெண் கைது
செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய நடிகர் மோகன்பாபு.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் பிரியாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி இருப்பதும், தற்போது அவர் தனியாக வாழ்ந்து வருவதும் தெரியவந்தது. பொள்ளாச்சியை சேர்ந்த விவசாயி மட்டுமின்றி பல பேரிடமும் பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com