கோவை: வாகன சோதனையில் சிக்கிய போதைப் பொருள் - இரு அசாம் இளைஞர்கள் கைது

கோவை: வாகன சோதனையில் சிக்கிய போதைப் பொருள் - இரு அசாம் இளைஞர்கள் கைது
கோவை: வாகன சோதனையில் சிக்கிய போதைப் பொருள் - இரு அசாம் இளைஞர்கள் கைது

கோவையில் புதிய வகை போதைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், பறிமுதல் செய்த போதைப் பொருள்களை போலீசார் ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

கோவை மாவட்டம் மதுவிலக்கு பிரிவு போலீசார், தொண்டாமுத்தூர் முத்திபாளையம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்றிருந்த இரண்டு இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின்னும் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் விற்பனை செய்வதற்காக சிறிய அளவிலான குப்பிகள் ஆரஞ்சு நிறத்திலான பெயர் தெரியாத 300 மில்லி கிராம் எடை கொண்ட போதை பொருள் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து அந்த போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார், விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அசாருல் இஸ்லாம், அப்துல் முத்தலீப் என்பதும் கோவை தொண்டாமுத்தூரில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

இதை அடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் அஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த 300 மில்லி கிராம் போதை பொருளை பறிமுதல் செய்து, அது என்ன வகையான போதைப்பொருள் என்பதை கண்டறிய கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ரசாயன பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com