\
விமானத்தில் வெடிமருந்து கொண்டு செல்ல முயன்ற நபர் கைது: கோவையில் பரபரப்பு

விமானத்தில் வெடிமருந்து கொண்டு செல்ல முயன்ற நபர் கைது: கோவையில் பரபரப்பு

விமானத்தில் வெடிமருந்து கொண்டு செல்ல முயன்ற நபர் கைது: கோவையில் பரபரப்பு
Published on

கோவை விமான நிலையத்தில் துப்பாக்கி பவுடர் வைத்திருந்ததாக பயணி ஒருவரை கைது செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்தனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் பயணி ஒருவரை சோதனை செய்தபோது அவரிடம் சந்தேகத்திற்கிடமான பொருள் இருந்தது. அதை சோதித்து பார்த்தபோது அது துப்பாக்கி பவுடர் என்ற வெடிமருந்து என தெரியவந்தது. இதையடுத்து பயணி அருண் வரோராவை பீளமேடு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இன்று காலை அருண் வரோராவை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து இவர் மீது வெடிமருந்து மற்றும் வெடிபொருள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரிடமிருந்து கைப்பற்றிய வெடி மருந்தை ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com