கோவை: வீடு புகுந்து நகைகளை திருட முயன்றதாக வடமாநில இளைஞர் கைது

கோவை: வீடு புகுந்து நகைகளை திருட முயன்றதாக வடமாநில இளைஞர் கைது

கோவை: வீடு புகுந்து நகைகளை திருட முயன்றதாக வடமாநில இளைஞர் கைது
Published on

கோவையில் நகைகளை திருட முயன்ற வடமாநில கொள்ளையனை பொதுமக்களே பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கோவை அருகே தொண்டாமுத்தூர் வலையன் குட்டை ரோட்டை சேர்ந்தவர் சண்முகம். நகை பட்டறையில் வேலை செய்து வரும் இவரது வீட்டுக்குள் திடீரென நுழைந்த நபர் டேபிளில் வைத்திருந்த நகையை திருட முயன்றுள்ளார். உடனடியாக அவரை கையும் களவுமாக பொதுமக்கள் உதவியுடன் பிடித்த சண்முகம், தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

நகை திருட முயன்ற அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர், வடமாநிலத்தைச் சேர்ந்த பரூக் அஹமது என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பரூக் அஹமதை கைது செய்தனர். கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கு முன்பாக நடந்த வழிப்பறி திருட்டு வழக்குகளில் தொடர்புடையவரா என்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com