\
கோவை: சிறுவனிடம் செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்

கோவை: சிறுவனிடம் செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்

கோவை: சிறுவனிடம் செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்
Published on

கோவையில் சிறுவனிடம் மர்ம நபர்கள் செல்போனை பறித்துச் செல்லும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகியுள்ளது.


கோவை கரும்புக்கடை டோல்கேட் அருகே கடந்த 23-ஆம் தேதி, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சிறுவனிடம் செல்போனை பறித்து சென்றுள்ளார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் செல்போனை பறிகொடுத்த சிறுவனின் பெயர் இர்சாத் என்பதும், இவர் கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு குனியமுத்தூர் போலீசார் வழிப்பறி திருடர்களை தேடிவருகிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com