மதுரை: கப்பலூர் சுங்கச்சாவடியில் கார் ஓட்டுநருக்கும் ஊழியர்களுக்கும் இடையே மோதல்

மதுரை கப்பலூர் சுங்கசாவடியில் கார் ஓட்டுநருக்கும் சுங்கசாவடி ஊழியருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. காரில் வந்தவர்களும், சுங்கசாவடி ஊழியர்களும் மாறி மாறி தாக்கிக்கொண்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பிரபு என்பவர் அவரது குடும்பத்துடன் கன்யாக்குமரிக்கு சுற்றுலா சென்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்பியுள்ளார். மதுரைக்கு அருகில் இருக்கும் கப்பலூர் சுங்கச்சாவடிவழியாக வந்துக்கொண்டிருந்த சமயத்தில் பாஸ்ட் டேக் ஸ்கேன் செய்வதில் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதைக்கண்ட சக ஊழியர்கள் பிரபுவுடன் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பிரபு தாக்கப்பட்ட நிலையில் அவர் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com