‘வலிக்குதுடா, விட்டுடுடா’- கதறிய சிறுவனை சாக்குப்பையில் இழுத்துச் சென்ற கொடூரன்!

‘வலிக்குதுடா, விட்டுடுடா’- கதறிய சிறுவனை சாக்குப்பையில் இழுத்துச் சென்ற கொடூரன்!

‘வலிக்குதுடா, விட்டுடுடா’- கதறிய சிறுவனை சாக்குப்பையில் இழுத்துச் சென்ற கொடூரன்!
Published on

10 வயது சிறுவனைக் கொலை செய்து சாக்குப்பையில் இழுத்துச்சென்ற 12 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.

உத்தரப்பிரதேசம் மீரட் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் சந்த் (10), முகுந்த் (12) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது). ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த, இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் ஒருவர் மீது ஒருவர் கோபத்துடன் இருந்துள்ளனர். கடந்த 18ஆம் தேதி இருவருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டு, மோதல் முற்றியுள்ளது. பெற்றோர்களுக்கு தெரியமால் நடந்த இந்தச் சண்டையில் சந்த்தை, முகுந்த் கடுமையாக தாக்கியுள்ளார்.

பின்னர் தன் வீட்டில் யாரும் இல்லாததால், சந்த்தை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார் முகுந்த். அங்கு சென்றதும் மேலும் தாக்கியதுடன் மட்டுமில்லாமல், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சந்த்தை குத்தியுள்ளார். வலி தாங்க முடியாத சிறுவன் சந்த், ‘வலிக்குதுடா, விட்டுடுடா’ என கதறியுள்ளார். ஆனால் இரக்கமற்ற முகுந்த், அவரை உயிர்போகும் வரை குத்திக்கொலை செய்துள்ளார். முகுந்துடன் அவனது நண்பன் ஒருவனும் சேர்ந்து சந்த்தை தாக்கியுள்ளான். பின்னர் என்னசெய்வதென்று சிந்தித்த முகுந்த், சந்த் உடலை வீட்டில் இருந்த சாக்குப்பையில் கட்டியுள்ளார். ரத்தக்கறையுடன் அந்தச் சாக்குப்பையை படிகளில் இழுத்துச்சென்றுள்ளார். கீழே இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்திற்கு இழுத்துச்சென்று, அங்கிருந்த தங்கள் ஸ்கூட்டியில் உடலை வைத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். ஆள்நடமாட்டம் இல்லாத தெருவிற்கு சென்று, அங்குள்ள கால்வாயில் உடலை வீசிவிட்டு வீடு வந்துள்ளார். 

சந்த்தின் பெற்றோர்கள் தனது மகனை காணவில்லை, யாரோ கடத்திச்சென்றுவிட்டனர் என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் முகுந்த்தின் பதில்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்துள்ளன. அத்துடன் பதட்டமாகவும் அச்சிறுவன் பதிலளித்துள்ளான். சிறுவன் என்ற எண்ணத்தில் காவல்துறையினருக்கு பெரிதாக சந்தேகம் ஏற்படவில்லை. பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை பரிசோதித்து பார்த்துள்ளனர். அதில் சந்த் உடலை சாக்குப்பையில் கட்டி முகுந்த் இழுத்துச்செல்லும் வீடியோ இருந்துள்ளது. இதைக்கண்டது அதிர்ச்சியடைந்த காவலர்கள், சிறுவன் முகுந்தை கைது செய்தனர். அத்துடன் அவனது கூட்டாளியான மற்றோரு சிறுவனும் கைது செய்யப்பட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com