சிறுமி பாலியல் வன்கொடுமை : இளைஞர் கைது

சிறுமி பாலியல் வன்கொடுமை : இளைஞர் கைது

சிறுமி பாலியல் வன்கொடுமை : இளைஞர் கைது
Published on

கோவையில் 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது
செய்துள்ளனர்.

கோவை பாப்பநாயகன்பாளையம் பகுதியை சேர்ந்த அந்த சிறுமி 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்துள்ளார். சில தினங்களாக சிறுமி சோர்வாக காணப்பட்டுள்ளார். இதனையடுத்து சந்தேகமடைந்த பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். பின்னர், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த தீனதயாளன் (20) என்ற இளைஞர் காதலிப்பதாக கூறி சிறுமியை இரு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், இளைஞர் தீனதயாளனை கோவை மத்திய அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com