பள்ளிப் பேருந்தில் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்- இருவர் கைது

பள்ளிப் பேருந்தில் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்- இருவர் கைது

பள்ளிப் பேருந்தில் குழந்தைக்கு பாலியல் துன்புறுத்தல்- இருவர் கைது
Published on

பள்ளிப் பேருந்தில் நான்கு வயது பெண் குழந்தையிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துனர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை பகுதியில் வித்யா விகாஸ் என்னும் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளயில் எல்.கே.ஜி வகுப்பில் பயின்று வரும் ஊமப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண் குழந்தை ஒன்று தினசரி அப்பள்ளி பேருந்தில் பள்ளிக்கு வந்து செல்கிறது. 

இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளியில் இருந்து மாலை வீடு திரும்பும் வழியில் அப்பள்ளி பேருந்தின் ஓட்டுனர் கோவிந்தராஜ் மற்றும் நடத்துனர் மாரிமுத்து ஆகியோர் அந்தக் குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர்.  அப்பேருந்திலிருந்து கடைசியாக இறங்கும் அந்தக் குழந்தையிடம் தனிமையை பயன்படுத்தி மிரட்டி பாலியல் துன்புறத்தலுக்கு ஆளாக்கியுள்ளனர். வீடு திரும்பிய குழந்தையிடம் காணப்பட்ட மாறுதல் காரணமாகவும், உடல் ரீதியான காயங்களினால் சந்தேகமடைந்த பெற்றோர் இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். பின் விசாரணையில் பள்ளிப் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இந்தப் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டது. 

இதனையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் துடியலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் பள்ளி நிர்வாகத்திடம் தீவிர விசாரணை மேற்கொண்டதோடு சம்பத்தப்பட்ட ஓட்டுனர் கோவிந்தராஜ் மற்றும் நடத்துனர் மாரிமுத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உரிய சிகிச்சை மற்றும் நிவாரணம் வழங்கவும் தொடர்புடைய குற்றவாளிகள் மீது பெண் குழந்தை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com